by Staff Writer 10-09-2020 | 7:56 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்றத்தின் நிதி அதிகாரம் வரையறுக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை கணக்காய்வு சேவைகள் சங்கம் எச்சரித்துள்ளது.
மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் இதனை தெரிவித்தனர்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்த இலங்கை கணக்காய்வு சேவைகள் சங்கம் 20 ஆவது திருத்தம் தொடர்பில் நீண்ட விளக்கத்தை அளித்தது.
பின்னர் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்த குழுவினர், விடயங்களை தௌிவுபடுத்தினர்.
மல்வத்து பீடத்தின் அநுநாயக்கர் திம்புல்கும்புரே ஶ்ரீ விமலதர்ம தேரரையும் குறித்த குழுவினர் சந்தித்தனர்.