மாடுகளை வெட்டத் தடை விதிப்பது தொடர்பான பிரேரணை பிற்போடப்பட்டுள்ளது: கெஹெலிய ரம்புக்வெல

by Bella Dalima 10-09-2020 | 8:18 PM
Colombo (News 1st) மாடுகளை வெட்டுவதைத் தடை செய்வது தொடர்பான பிரேரணை தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இன்று தெரிவித்தார். மாடுகளை வெட்டுவதைத் தடை செய்வது தொடர்பான பிரேரணை ஒரு மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாகவும் அனைத்துப் பிரிவினரிடம் இருந்தும் தேவையான கருத்துக்கள் பெறப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.