அவசர பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பிரித்தானியா  

ஐரோப்பிய ஒன்றியத்துடன் அவசர பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பிரித்தானியா  

by Bella Dalima 10-09-2020 | 5:05 PM
Colombo (News 1st) பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. பிரெக்ஸிட் (Brexit) உடன்படிக்கையின் பிரதான பகுதிகளை நிராகரிப்பதற்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் தீர்மானித்ததால் அதிகரித்த பதற்றத்தினையடுத்து பேச்சுவார்த்தைகளுக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அயர்லாந்தை இந்த அபிவிருத்திகள் எவ்வாறு பாதிக்கும் என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பிரித்தானிய அமைச்சரவை அலுவலக அமைச்சர் மைக்கல் கோவ் (Michael Gove), ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி மரோஸ் செஃப்கோவிக்கை (Maros Sefcovic) லண்டனில் சந்திக்கவுள்ளார். பிரெக்ஸிட் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரித்தானியாவின் பிரெக்ஸிட்டுக்கான பேச்சாளர் லார்ட் ஃபொரஸ்டிற்கும் (Lord Frost) ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் மைக்கல் பார்னியருக்கும் (Michel Barnier) இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.