வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஆயுதங்களுடன் 7 பேர் கைது

வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஆயுதங்களுடன் 7 பேர் கைது

வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஆயுதங்களுடன் 7 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2020 | 4:00 pm

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஆயுதங்களுடன் சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திக்வெல்ல, போதரகந்த பகுதியில் துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்த பல்வேறு வகையிலான துப்பாக்கிகள் மற்றும் 27 ரவைகள், T56 ரக ரவைகள் 5, சட்டவிரோத கத்தி மற்றும் வாள் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

போரகந்த, ஊருகமுவ பகுதிகளைச் சேர்ந்த 19, 33 மற்றும் 62 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அவிசாவளை, பிட்டதெனிய தெஹிடிவிட்ட பகுதிகளில் சீதாவக்க பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் வௌிநாட்டு தயாரிப்பிலான இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

34 மற்றும் 67 வயதுடைய தெஹியோவிட்ட பகுதியைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, யக்கலமுல்ல, தெஹிகஹஹேன பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் 41 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யக்கலமுல்ல – டைகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கியுடன் 44 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்