பூசா கைதிகள் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டம்

பூசா சிறைச்சாலையில் கைதிகள் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டம்

by Staff Writer 10-09-2020 | 4:08 PM
Colombo (News 1st) பூசா சிறைச்சாலையில் கைதிகள் சிலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு நடைமுறைகளை இலகுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாட சந்தர்ப்பமளிக்கப்படாமை, கைதிகளைப் பார்வையிட வருவோரை சோதனைக்குட்படுத்துதல், சிறைச்சாலை வளாகத்தில் சோதனை மேற்கொள்ளல் போன்றவற்றைத் தவிர்க்குமாறு வலியுறுத்தி கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.