பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2020 | 3:36 pm

Colombo (News 1st) பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வெட்டுக்காயங்களுடனான சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹோகந்தர – சிங்கபுர பகுதியை சேர்ந்த 74 வயதான ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த 7 ஆம் திகதியில் இருந்து காணமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்