நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

10 Sep, 2020 | 6:05 pm

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி தனது 45 ஆவது வயதில் இன்று காலமானார்.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியைப் பின்பற்றி ரசிகர்களை ஈர்த்த பாலாஜி தமிழகத்தின் ளெ்ளித்திரை நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவராவார்.

அண்மைக்காலமாக திரைப்படங்களிலும் அவர் தனது நடிப்பாற்றலை வௌிப்படுத்தியிருந்தார்.

15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் முடங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அன்னாரின் திடீர் மறைவினை அடுத்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

45 வயதான வடிவேலு பாலாஜி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்