24 மணித்தியாலங்களில் 95,735 கொரோனா நோயாளர்கள்

இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 95,735 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

by Bella Dalima 10-09-2020 | 4:54 PM
Colombo (News 1st) இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 95,735 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் 1,172 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் நாளொன்றில் பதிவாகிய மிக அதிகமான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும், கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் இவையாகும். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 44,65,000 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, அங்கு 90,802 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனைய செய்திகள்