பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு: அட்டலுகமயில் நால்வர் கைது

by Staff Writer 09-09-2020 | 5:05 PM
Colombo (News 1st) சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட நால்வர் பண்டாரகம, அட்டலுகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் நால்வரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். அட்டலுகம - மாராவ பகுதியில் வீடொன்றில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து பெண்கள் நால்வரும் ஆண்கள் நால்வரும் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, சந்தேகநபர்கள் உள்ளிட்ட தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர், மகளிர் பொலிஸ் சார்ஜன் ஒருவர், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆகியோர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெண்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.