பூச்சிகளால் அழிவடையும் திராட்சை செய்கை: யாழ். விவசாயிகள் விசனம்

பூச்சிகளால் அழிவடையும் திராட்சை செய்கை: யாழ். விவசாயிகள் விசனம்

பூச்சிகளால் அழிவடையும் திராட்சை செய்கை: யாழ். விவசாயிகள் விசனம்

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2020 | 7:05 pm

Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் திராட்சை செய்கை பூச்சியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை, இளவாலை, அளவெட்டி, உரும்பிராய், அச்சுவேலி, புன்னாலைக்கட்டுவன் போன்ற இடங்களில் திராட்சை செய்கை அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றது.

யாழ். மாவட்டத்தில் சுமார் 195 ஏக்கரில் திராட்சை செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில், கராவல் எனும் பூச்சியின் தாக்கம் காரணமாக திராட்சைப் பழங்கள் வெடித்து அழுகி கீழே வீழ்கின்றன.

யாழ். மாவட்டத்தின் உரும்பிராய் பகுதியில் இந்த வருடம் நோய்த்தாக்கம் அதிகம் காணப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

நோய்த்தாக்கம் காரணமாக தாம் தொடர்ந்து நட்டமடைந்து வருவதாகவும் வாழ்வாதார நெருக்கடியையும் கடன் சுமையையும் எதிர்கொண்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்