பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்

பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2020 | 8:40 pm

Colombo (News 1st) மரணதண்டனை விதிக்கப்பட்டவரான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தமை தொடர்பில் சர்வதேச ஊடங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டும், அவர் எப்படி பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்ய முடியும் என The New York Times பத்திரியை செய்தியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆட்கொலை வழக்குடன் தொடர்புடைய இலங்கை அரசியல்வாதி ஒருவர் குற்றவாளியாகக் காணப்பட்ட நிலையில், சத்தியப்பிரமாணம் செய்வதற்காக எதிர்க்கட்சியின் கோஷங்களுக்கு மத்தியில் சிறைச்சாலையிலிருந்து பாராளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டதாக The Guardian செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேமலால் ஜயசேகர, இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என Al Jazeera செய்தி வௌியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்