பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல் வௌியீடு 

பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல் வௌியீடு 

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2020 | 7:10 am

Colombo (News 1st) நாட்டில் பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நேற்று (08) காலை 8.30 மணி முதல் இன்று (09) அதிகா​லை 4.30 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பிலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

121 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கொழும்பில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி – கஹதுடுவ பகுதியில் 112 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் காலி – ஏத்கந்துர பகுதியில் 105 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்