தனிப்பட்ட நபரை நாட்டின் சர்வாதிகாரியாக்க முயற்சி

தனிப்பட்ட நபரை நாட்டின் சர்வாதிகாரியாக்கும் முயற்சியே 20 ஆவது திருத்தம்: சித்தார்த்தன்

by Bella Dalima 09-09-2020 | 5:27 PM
Colombo (News 1st) தனிப்பட்ட நபரை நாட்டின் சர்வாதிகாரியாக்குவதற்கான முயற்சியாக 20 ஆவது திருத்தத்தை பார்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார். 19 ஆவது திருத்தத்தில் உள்ள ஜனநாயக அம்சங்கள் பலவற்றை இல்லாமலாக்குவதற்கான முயற்சி இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக எதிர்க்கும் என குறிப்பிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வௌியேயும் எதிர்ப்பை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.