சில்லுக்கருப்பட்டிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது

சில்லுக்கருப்பட்டிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது

சில்லுக்கருப்பட்டிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது

எழுத்தாளர் Bella Dalima

09 Sep, 2020 | 3:30 pm

Colombo (News 1st) ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகிய ‘சில்லுக்கருப்பட்டி’ படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்துள்ளது.

சில்லுக்கருப்பட்டி – நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளைப் பற்றிக் கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படத்தை டிவைன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருந்தார். 2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா வெளியிட்டார். சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜூன், மணிகண்டன், நிவேதிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படம் டொரண்டோவில் நடைபெறும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது. இதனை அப்படத்தின் இயக்குனர் ஹலிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். திரைப்பட விழாக்களில் இதுபோன்ற விருதுகள் கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்படம், கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாவது பரிசை வென்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்