by Staff Writer 09-09-2020 | 11:12 AM
Colombo (News 1st) தெற்காசியாவின் வேகமான ஓட்டப்பந்தய வீரர் என்ற சிறப்பை இலங்கையின் யுப்புன் அபேகோன் பெற்றுள்ளார்.
ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச ஓட்டப்பந்தய போட்டியில் அவர் 100 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனையை படைத்தார்.
ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை இலங்கையின் யுப்புன் அபேகோன் 10.16 செக்கன்களில் கடந்தார்.
இது 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் புதிய இலங்கை சாதனையாக பதிவானது.
இதற்கு முன்னர் ஹிமாஸ ஹேஷான் தெற்காசியாவின் வேகமான வீரர் என்ற சிறப்பையும் பெற்றதுடன் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தேசிய சாதனையையும் படைத்திருந்தார்.
2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இந்த சாதனையை அவர் படைத்திருந்தார்.
100 மீற்றர் தூரத்தை அவர் 10.22 செக்கன்களில் கடந்திருந்தார்.
அதன்படி 100 மீற்றர் தூரத்தை யுப்புன் அபேகோன், ஹீமாஸ ஹேஷானை விட 0.4 செக்கன்கள் முந்திக் கடந்துள்ளார்.
ஜெர்மனியின் ஓட்டப்பந்தய வீரரான டென்னிஸ் அல்விஸையும் இந்தப் போட்டியில் யுப்புன் அபேகோன் வீழ்த்தியிருந்தார்.
போட்டியில் டென்னிஸ் அல்விஸூக்கு இரண்டாமிடம் கிடைத்ததுடன் அவர் 100 மீற்றரை 10.12 செக்கன்களில் கடந்திருந்தார்.