ஆப்கானிஸ்தான் துணை அதிபரை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

ஆப்கானிஸ்தான் துணை அதிபரை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

ஆப்கானிஸ்தான் துணை அதிபரை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

09 Sep, 2020 | 4:12 pm

Colombo (News 1st) ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலேவை இலக்கு வைத்து இன்று நடத்தப்பட்ட தற்கொலைப் படையின் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் காபூலின் தைமானி பகுதியில் இன்று காலை 7:30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்த தாக்குதலில் அம்ருல்லா சலே சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். துணை அதிபரின் பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்க உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்