20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சியினர் சத்தியாகிரகம்

by Staff Writer 08-09-2020 | 8:44 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிவில் செயற்பாட்டாளர்களும் இன்று சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 19 ஆவது திருத்தத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சத்தியாகிரகப் போராட்டம் பாராளுமன்றத்தை அண்மித்து அமைந்துள்ள காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரரின் உருவச்சிலைக்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்ட பின்பு ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் இதில் இணைந்துகொண்டிருந்தனர். பின்னர் 19-ஐ பாதுகாத்து 20-​ஐ எதிர்க்கும் மகஜரையும் கையளித்தனர். தனி ஒருவரின் சர்வாதிகார ஆட்சியை நோக்கிய யுகத்திற்கு செல்வதற்கான முயற்சியாகவே 20 ஆவது திருத்தத்தை உருவாக்கியுள்ளதாக இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். மகஜரைக் கையளித்த பின்னர் அவர்கள் பேரணியாக பத்தரமுல்லை ஜப்பான் நட்புறவுப் பாலத்திற்கு அருகில் சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.