by Staff Writer 08-09-2020 | 1:08 PM
Colombo (News 1st) மன்னார் - ஷாந்திபுரம் பகுதியில் 1,379 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, லொறியொன்று நேற்று (07) பிற்பகல் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது லொறியில் 51 உரப்பைகளில் பொதியிடப்பட்டிருந்த 1,379 கிலோ 970 கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
உப்பு பக்கற்றுகளுடன் மஞ்சள் பொதிகள் மறைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த மஞ்சள், சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.