கற்பிட்டியில் 10 கிலோகிராம் தங்கத்துடன் ஒருவர் கைது 

கற்பிட்டியில் 10 கிலோகிராம் தங்கத்துடன் ஒருவர் கைது 

கற்பிட்டியில் 10 கிலோகிராம் தங்கத்துடன் ஒருவர் கைது 

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2020 | 9:39 am

Colombo (News 1st) புத்தளம் – கற்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 10 கிலோகிராம் தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், காரின் இருக்கையில் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

வௌிநாட்டிற்கு அனுப்புவதற்கே இந்த தங்கம் கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

புத்தளத்தைச் சேர்ந்த 34 வயதான ஒருவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது தங்கம் மற்றும் கார் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்