20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தோற்கடிக்க SJB இன் பாராளுமன்ற குழு தீர்மானம் 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தோற்கடிக்க SJB இன் பாராளுமன்ற குழு தீர்மானம் 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தோற்கடிக்க SJB இன் பாராளுமன்ற குழு தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2020 | 5:04 pm

Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபை நிபந்தனையின்றி தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி இன்று (07) தீர்மானித்துள்ளது.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கூடிய பாராளுமன்ற குழு ஏகமனதான இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கான பிரேரணையை புத்திக பத்திரண முன்வைத்ததுடன் அதனை அசோக் அபேசிங்க வழிமொழிந்து உறுதி செய்துள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பு திருதத்தில் காணப்படும் ஜனநாயக விழுமியங்களை மேலும் வலுப்படுத்துவதும் (19 +) பத்தொன்பது பிளஸ் வரை அதனை முன்னெடுப்பதும் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்