இரத்தினக்கல் தொழிலாளர்களுக்கான வருமான வரி நீக்கம்

இரத்தினக்கல், தங்காபரண கைத்தொழிலாளர்களுக்கான வருமான வரியை நீக்க தீர்மானம் 

by Staff Writer 07-09-2020 | 6:02 PM
Colombo (News 1st) இரத்தினக்கல் மற்றும் தங்காபரண கைத்தொழிலாளர்கள் உழைக்கும் போது செலுத்தும் 14 வீத வருமான வரி மற்றும் தங்க இறக்குமதிக்கான 15 வீத வரியை நீக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் தங்க இறக்குமதிக்காக 15 வீத வரி விதிக்கப்பட்டது. தங்காபரணங்களின் விலை அதிகரிப்புக்கு இது காரணமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வரிகளை துரிதமாக நீக்கி இரத்தினக்கல் கைத்தொழிலிலின் முன்னேற்றத்திற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இரத்தினக்கல் மற்றும் தங்காபரண கைத்தொழில் தொடர்பிலான அமைச்சின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (07) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.