ஹங்கேரியில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணி

ஹங்கேரியில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணி

ஹங்கேரியில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணி

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2020 | 3:19 pm

Colombo (News 1st) ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் பல்கலைக்கழகமொன்று அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானோரால் தலைநகர் Budapest இல் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கலைத்துறையைச் சேர்ந்த குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை அரசாங்கம் பொறுப்பேற்குமானால் பல்கலைக்கழகத்தின் சுய நிர்வாக அதிகாரம் பறிக்கப்படுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல்கலைக்கழகமானது அரசாங்கத்தின் அனுமதியுடன் தனியார்மயமாக்கப்படும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை ஹங்கேரி அரசாங்கம் மறுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்