மேல் மாகாணத்தில் போதைப்பொருட்களுடன் 637 பேர் கைது

மேல் மாகாணத்தில் போதைப்பொருட்களுடன் 637 பேர் கைது

மேல் மாகாணத்தில் போதைப்பொருட்களுடன் 637 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2020 | 7:23 pm

Colombo (News 1st) மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருட்களுடன் 637 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 283 சந்தேக நபர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 217 கிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (06) காலை 6 மணி முதல் இன்று (07) காலை 5 மணி வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கஞ்சாவுடன் 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்