பிரேமலால் ஜயசேகரவிற்கு சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி

பிரேமலால் ஜயசேகரவிற்கு சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி

பிரேமலால் ஜயசேகரவிற்கு சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2020 | 2:43 pm

Colombo (News 1st) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) அனுமதியளித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான அனுமதியை வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரேமலால் ஜயசேகர தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினர், சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்