நாட்டில் 3123 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 3123 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 3123 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2020 | 2:52 pm

Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,123 ஆக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் (06) ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,925 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 239,907 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 1,820 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, கொரோனா தொற்றினால் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 110 பேர் இன்று நாடு திரும்பினர்.

ஜேர்மன், துபாய், கத்தார், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன் வௌிநாடுகளிலிருந்து மேலும் 86 பேர் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் கண்காணிப்பு முகாம்களில் இருந்து 32 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர்.

இதன் பிரகாரம் இதுவரை 38,359 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

எனினும் 63 நிலையங்களில் 6,610 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக COVID – 19 தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்