New Diamond கப்பல் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது 

by Staff Writer 06-09-2020 | 3:56 PM
Colombo (News 1st) இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் New Diamond கப்பலில் பரவிய தீ இன்று (06) மதியம் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக கடற்படைத் தளபதி, வைஸ் அத்மிரல் நிஷாந்த உளுகேதென்ன தெரிவித்தார். எனினும், கப்பலில் மீண்டும் தீ பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கடற்படைத் தளபதி இதன்போது கூறியுள்ளார்.