வைத்தியர் பற்றாக்குறை; நிவர்த்திக்குமாறு போராட்டம்

வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டம் 

by Staff Writer 06-09-2020 | 7:47 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று (06) முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினால் மாவட்ட வைத்தியசாலை முன்பாக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற சில கிராம மக்களின் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கடந்த சில மாதங்களாக பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு நியமிக்கப்படுகின்ற வைத்தியர்கள் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்று செல்வதால் வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதாக முல்லைத்தீவு மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.