வெலிக்கடை மகளிர் பிரிவிலிருந்து தொலைபேசிகள் மீட்பு

வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவிலிருந்து 13 கையடக்க தொலைபேசிகள் மீட்பு 

by Staff Writer 06-09-2020 | 4:25 PM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவிலிருந்து 13 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைச்சாலையின் புலனாய்வு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 7 சிம் அட்டைகளும் 150 பெற்றிகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சிறைச்சாலையின் மதில் மேல் இருந்து அல்லது பொதிகளூடாக இவை மகளிர் பிரிவிற்கு அனுப்பட்டிருக்கக்கூடும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.