வெலிக்கடை சிறைக்குள் பொதியொன்றை வீச முயன்றவர் கைது

வெலிக்கடை சிறைக்குள் பொதியொன்றை வீச முயன்றவர் கைது 

by Staff Writer 06-09-2020 | 5:08 PM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் சிலவற்றை வீசுவதற்கு முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வீசுவதற்கு முயற்சித்த பொதிக்குள் கையடக்கத் தொலைபேசிகளுக்கான 10 மின்கலங்கள், 02 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 36,000 ரூபா பணம் என்பன காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் வீசப்படுவதை தடுப்பதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவை பெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபருடன் தொடர்புகளை பேணியவர்கள் குறித்தும் விசாரணை செய்யப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.