முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Sep, 2020 | 4:45 pm

Colombo (News 1st) முட்டையின் விலை நாளை (07) முதல் 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாளை முதல் வௌ்ளை முட்டையின் விலை 18 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் விலை 18 ரூபா 50 சதமாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

கோழிக் குஞ்சுகளின் விலை 350 ரூபாவாக அதிகரித்தமையாலேயே முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் அதன் விலையை 175 ரூபாவாக குறைக்குமாறு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர்களை தொடர்புகொண்ட பிரதமர், குறித்த கோரிக்கை தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்