18, 19 ஆவது திருத்தங்களுக்கு கையை உயர்த்தியவர்கள் 20 ஆவது திருத்தத்தின் போது என்ன செய்யப் போகிறார்கள்?

18, 19 ஆவது திருத்தங்களுக்கு கையை உயர்த்தியவர்கள் 20 ஆவது திருத்தத்தின் போது என்ன செய்யப் போகிறார்கள்?

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2020 | 9:02 pm

Colombo (News 1st) 18, 19, 20 ஆவது திருத்தங்கள் தொடர்பாக இந்த நாட்களில் அதிகளவில் பேசப்படுகிறது.

18 சரியில்லை என்று கூறி 19-ஐ கொண்டுவந்தனர். அந்த சகலவற்றுக்கும் பதிலாக 20-ஐக் கொண்டுவர தயாராகியுள்ளனர்.

கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் மக்கள் பிரதிநிதிகள் சிலர் 18, 19 ஆகிய இரண்டு திருத்தங்களுக்குமே கையை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர்.

அவர்களில் ஒரு சாரார் புதிய பாராளுமன்றத்திற்கும் தெரிவாகியுள்ளனர்.

அன்று 18 ஆவது திருத்தத்தினை இரத்து செய்து 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு ஆதரவு தெரிவித்த ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் இந்த முறை 20 ஆவது திருத்தத்தின் போது என்ன செய்வார்கள்?

ரோஹித அபேகுணவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன, மஹிந்த அமரவீர, திலும் அமுனுகம, லசந்த அழகியவன்ன, டலஸ் அழகப்பெரும, மஹிந்தானந்த அளுத்கமகே, இந்திக அனுருத்த, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, சிறிபால கம்லத், உதய கம்மன்பில, எஸ்.எம் சந்திரசேன, சிசிர ஜயக்கொடி, பியங்கர ஜயரத்ன, ஜனக பண்டார தென்னகோன் ஆகி​யோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

அதேபோன்று, மொஹான் டி சில்வா, நிமல் சிறிபால டி சில்வா, பியல் நிஷாந்த, எஸ்.பி திசாநாயக்க, விமலவீர திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க, டக்லஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார, சனத் நிஷாந்த, ரமேஷ் பத்திரண, ஜகத் புஷ்பகுமார, ஜயந்த கெடகொட, டிலான் பெரேரா, அருந்திக பெர்னாண்டோ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரும் இந்தப் பட்டியலில் இருக்கின்றனர்.

சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, சுசில் பிரேமஜயந்த, ஷாந்த பண்டார, விஜித் பேருகொட, அனுர பிரியதர்ஷன யாப்பா, சீ.பி.ரத்நாயக்க, ரொஷான் ரணசிங்க, கெஹலிய ரம்புக்வெல்ல, நாமல் ராஜபக்ஸ, கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ, நிமல் லன்சா, ஜனக வக்கும்புர இந்தப் பட்டியலில் உள்ளடங்கும் ஏனைய உறுப்பினர்களாவர்.

பவித்ரா வன்னியாரச்சி, விதுர விக்ரமநாயக்க, காஞ்சன விஜேசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, தேனுக விதானகமகே, சந்திம வீரக்கொடி, விமல் வீரவன்ச, மஹிந்த சமரசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜோன் செனவிரத்ன, ஷெஹான் சேமசிங்க, கனக ஹேரத், ஜயரத்ன ஹேரத் ஆகியோரும் இந்தப் பட்டியலுக்குள் உள்ளடங்குகின்றனர்.

18 மற்றும் 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது பாராளுமன்றத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் இருவரின் சிறப்பம்சங்கள் உள்ளன.

சமல் ராஜபக்ஸ சபாநாயகராக செயற்பட்டமை அதேபோன்று சரத் வீரசேகர 19 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தமை ஆகியனவே அந்த இரண்டு சிறப்பம்சங்களாகும்.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, 18 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட காலத்தில் ஜனாதிபதியாக இருந்தார்.

19 ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்ட போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்