தேசிய நிதி மூலம் வீதிகளை புனரமைக்க தீர்மானம்

தேசிய நிதியை மாத்திரம் பயன்படுத்தி வீதிகளை புனரமைக்க தீர்மானம்

by Staff Writer 05-09-2020 | 3:57 PM
Colombo (News 1st) தேசிய நிதியை மாத்திரம் பயன்படுத்தி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய வீதிகளை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் இந்த வீதிகளின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அலரி மாளிகையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'சுபீட்சத்தின் நோக்கு' வேலைத்திட்டத்தின் கீழ் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வீதிகளை புனரமைக்கும் பணிகளின் போது இலங்கை மின்சார சபை மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.