பங்களாதேஷ் மசூதியில் காற்றுப் பதனாக்கிகள் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்

பங்களாதேஷ் மசூதியில் காற்றுப் பதனாக்கிகள் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்

பங்களாதேஷ் மசூதியில் காற்றுப் பதனாக்கிகள் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

05 Sep, 2020 | 4:46 pm

Colombo (News 1st) பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள மசூதி ஒன்றில் 6 காற்றுப் பதனாக்கிகள் (Air Conditioner) வெடித்ததில் ஒரு குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர், 25 பேர் காயமடைந்துள்ளனர்.

டாக்காவின் நாராயங்கஞ்ச் நதித் துறைமுகப் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று (04) இரவு 9 மணியளவில் காற்றுப் பதனாக்கிகள் வெடித்துள்ளன.

இது குறித்து நாராயங்கஞ்ச் தீயணைப்பு சேவை அதிகாரி அப்துல்லா அல் அரேஃபின் டாக்கா ட்ரிப்யூன்,

மசூதிக்கு அடியில் Titas வாயுவின் குழாய் செல்கிறது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் குழாயில் இருந்து கசிந்த வாயுவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம். வாயுக் கசிவின் போது காற்றுப் பதனாக்கியை யாரேனும் அணைக்கவோ, இயக்கவோ செய்யும் போது விபத்து நடந்திருக்கலாம்

என கூறியுள்ளார்.

இந்த விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்