கப்பலில் பரவிய தீயைக் கட்டுப்படுத்த போராடும் அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

கப்பலில் பரவிய தீயைக் கட்டுப்படுத்த போராடும் அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2020 | 4:07 pm

Colombo (News 1st) MT New Diamond கப்பலில் பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்த உயிரை பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் செயற்படும் கடற்படையினர், விமானப்படையினர், துறைமுகங்கள் மற்றும் இந்திய பாதுகாப்பு பிரிவினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

தீ பரவிய MT New Diamond கப்பலை பாதுகாப்பான கடற்பிராந்தியத்திற்குள் நகர்த்தியுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கப்பல் நேற்றிரவு இலங்கை கரையை நோக்கி வேகமாக நகர்ந்தமையால், அதனை பாதுகாப்பு பிராந்தியத்திற்குள் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.

அதற்கமைய, இலங்கை கரையிலிருந்து 40 கடல் மைல் தொலைவிற்கு இந்த கப்பல் நகர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கப்பலில் பரவிய தீ தற்போது ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்