பிரேமலால் ஜயசேகர எழுத்தாணை மனு தாக்கல்

பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல்

by Staff Writer 04-09-2020 | 3:33 PM
Colombo (News 1st) பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்குமாறு கோரி பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு (Writ Petition) தாக்கல் செய்துள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறை அத்தியட்சகர் ஆகியோருக்கு இந்த உத்தரவை பிறப்பிக்குமாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர மேன்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவின் பிரதிவாதிகளாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவும் வெலிக்கடை சிறைச்சாலையின் அத்தியட்சகரும் பாராளுமன்ற செயலாளர் நாயகமும் பெயரிடப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக மேற்முறையீடு செய்துள்ளதால், பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்குமாறு பிரேமலால் ஜயசேகர தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது இரத்தினபுரியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் பிரேமலால் ஜயசேகரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.