by Staff Writer 04-09-2020 | 4:01 PM
Colombo (News 1st) அதிக விலைக்கு மஞ்சளை விற்பனை செய்த 50 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகாரிகளால் நாடளாவிய ரீதியில் இதுவரை 120 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, கலப்படம் கலந்த மஞ்சளை விற்பனை செய்வோர் தொடர்பிலான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இத்தகையோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.