ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரவூப் ஹக்கீம் ஆஜர்

by Staff Writer 04-09-2020 | 3:41 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆஜராகியுள்ளார். ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு சென்றுள்ளார். தாக்குதல் தொடர்பில் பல தரப்பினரால் வழங்கப்பட்ட சாட்சியங்கள் குறித்து ரவூப் ஹக்கீமிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதி அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறுக்கு விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்