43 ஊழியர்கள், 6000 கறவைப் பசுக்களுடன் மூழ்கிய கப்பல்: ஜப்பான் கடற்படையினரால் ஒருவர் மீட்பு

43 ஊழியர்கள், 6000 கறவைப் பசுக்களுடன் மூழ்கிய கப்பல்: ஜப்பான் கடற்படையினரால் ஒருவர் மீட்பு

43 ஊழியர்கள், 6000 கறவைப் பசுக்களுடன் மூழ்கிய கப்பல்: ஜப்பான் கடற்படையினரால் ஒருவர் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Sep, 2020 | 4:52 pm

Colombo (News 1st)  43 ஊழியர்கள், 6000 கறவைப் பசுக்களுடன் ஜப்பான் கடற்பிராந்தியத்தில் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளது.

குறித்த கப்பலில் இருந்த ஒருவர் ஜப்பான் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

Maysak சூறாவளி காரணமாக Gulf Livestock1 எனும் கப்பல் காணாமற்போயுள்ளது. குறித்த கப்பல் மூழ்குவதாக கிழக்கு சீனக் கடலிலிருந்து சமிக்ஞை அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கப்பலைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணாமற்போன கப்பல் ஊழியர்களில் பிலிப்பைன்ஸ், நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாட்டினர் அடங்கலாக 39 வௌிநாட்டவர்களும் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய அலை ஒன்றினால் அடித்துச் செல்லப்பட்டதால் கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு மூழ்கியதாக மீட்கப்பட்ட பிலிப்பைன் நாட்டைச்சேர்ந்த கப்பல் பணியாளர் கூறியுள்ளார்.

கப்பலில் இருந்தவர்களை மிதவைச் சட்டை அணியுமாறு அறுவுறுத்தப்பட்ட நிலையில், தாம் அதனை அணிந்துகொண்டு நீரில் குதித்ததாக அந்நபர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்