by Staff Writer 03-09-2020 | 7:23 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜரானார்.
ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று முற்பகல் 09 மணியளவில் அவர் ஆஜராகியதாக நியூஸ்ஃபெஸ்ட் அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
பொலிஸ் பிரிவில் ஆஜராகிய பிள்ளையானிடம் மாலை 3 மணி வரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கொழும்பிற்கு நேற்று (02) அழைத்துவரப்பட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் அவர் தங்கவைக்கப்பட்டுள்ளார்.