​வௌிநாட்டில்  பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்கள் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

​வௌிநாட்டில்  பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்கள் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2020 | 7:37 pm

Colombo (News 1st) ​வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு – காலி முகத்திடலில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் நான்கு மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் வௌிநாட்டில் பட்டம் பெற்றவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை வௌிநாட்டு பட்டதாரிகள் ஒன்றியத்தினர் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்