by Bella Dalima 03-09-2020 | 4:17 PM
Colombo (News 1st) இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கு ஊடுருவப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள அவருடைய உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கை 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
குறித்த ட்விட்டர் கணக்கு இன்று அதிகாலை ஊடுருவப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
COVID-19 இற்கான பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குமாறு பதிவிடப்பட்ட போலி ட்வீட்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு ஊடுருவப்பட்டதை டுவிட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், தேவையான பக்கங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.