ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 69 ஆவது வருட பூர்த்தியைக் கொண்டாடுகிறது

by Staff Writer 02-09-2020 | 4:40 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனது 69 ஆவது வருட பூர்த்தியை இன்று கொண்டாடுகின்றது. 1951 ஆம் ஆண்டில் இன்று போன்றதொரு நாளில் S.W.R.D பண்டாரநாயக்கவின் தலைமைத்துவத்தில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் 1956 இல் ஆட்சிக்கு வந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திரத்தின் பின்னர் பல தலைவர்களை உருவாக்கிய கட்சி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. கட்சி தோற்றம் பெற்று 5 வருடங்களின் பின்னரான தேர்தலுக்கு முகம் கொடுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளடங்கலான கூட்டணி 1956 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியதுடன், இலங்கையின் நான்காவது பிரதமராக S.W.R.D பண்டாரநாயக்க பதவியும் வகித்தார். அதன் பின்னர் சில தடவைகள் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் நாட்டின் அபிவிருத்தி மற்றும் இறையாண்மைக்கு அதிக பங்களிப்பை வழங்கியுள்ளனர். இன்றுடன் 69 வருடங்களை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூர்த்தி செய்வதை முன்னிட்டு மத அனுஷ்டானங்கள் இடம்பெறும் என கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.