கொரோனா: 4 பேர் குணமடைந்தனர், 199 பேருக்கு சிகிச்சை

கொரோனா தொற்று: 4 பேர் குணமடைந்தனர், 199 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

by Staff Writer 02-09-2020 | 5:34 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 04 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,883 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்று இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில்​ 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 199 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.