இந்தியர்கள் மலேசியாவிற்குள் பிரவேசிக்க தடை

இந்தியர்கள் மலேசியாவிற்குள் பிரவேசிக்க தடை

by Bella Dalima 02-09-2020 | 4:45 PM
Colombo (News 1st) இந்தியர்கள் மலேசியாவிற்குள் பிரவேசிக்க எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியாவிற்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விசா பெற்றிருப்பவர்களுக்கும் இந்த தடை பொருந்துமென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 03 நாடுகளிலும் அண்மைக்காலமாக COVID-19 தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.