எரிவாயு சிலிண்டர் வெடித்தது: அபுதாபியில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு

எரிவாயு சிலிண்டர் வெடித்தது: அபுதாபியில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு

எரிவாயு சிலிண்டர் வெடித்தது: அபுதாபியில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2020 | 4:08 pm

Colombo (News 1st) அபுதாபியில் உணவகமொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இலங்கை பிரஜை அந்த உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

அனர்த்தத்தில் மாத்தறை – வெலிகம பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இளைஞரின் பூதவுடல், அபுதாபியிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் கடந்த 31 ஆம் திகதி காலை 10:15 அளவில் இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்