இளம்பெண்ணின் வயிற்றில் 4 அடி நீளம் கொண்ட பாம்பு

இளம்பெண்ணின் வயிற்றில் 4 அடி நீளம் கொண்ட பாம்பு

இளம்பெண்ணின் வயிற்றில் 4 அடி நீளம் கொண்ட பாம்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2020 | 5:19 pm

Colombo (News 1st) ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள லெவாஷி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் வயிற்றினுள் இருந்து 4 அடி நீளம் கொண்ட பாம்பை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

வழக்கமாக வீட்டின் முற்றத்தில் திறந்தவெளியில் உறங்கும் பழக்கம் கொண்ட அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஏதோ ஒன்று நெளிவதைப் போன்று உணர்ந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உயிருடன் ஏதோ ஒரு உயிரினம் உள்ளே இருப்பதை உறுதி செய்து என்டோஸ்கோப்பி உதவியுடன் அதை வெளியேற்ற முடிவு செய்தனர்.

அறுவை சிகிச்சை அறையில், பெண்ணின் வயிற்றுக்குள் எண்டோஸ்கோப்பி கருவியை உள்ளே செலுத்தி, அந்த உயிரினத்தை பிடித்து வெளியே இழுத்தனர். அப்போதுதான் அது 4 அடி நீளம் கொண்ட பாம்பு என்பதை அறிந்து மருத்துவர்கள் அதிர்ந்து போயினர்.

இந்த காட்சியை அங்கே பணியில் இருந்த மற்றொரு மருத்துவர் வீடியோ எடுத்து வெளியிட, அது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்