வாகரையில் மின்னல் தாக்கி 27 பசுக்கள் உயிரிழப்பு

by Staff Writer 01-09-2020 | 8:34 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வாகரை, மாவடி ஓடை பகுதியில் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளன. மாவடி ஓடை பகுதியில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதன்போது, மின்னர் தாக்கத்தினால் தமது 27 பசு மாடுகள் இறந்துள்ளதாக பண்ணையாளரான தம்பி ஐயா ரஞ்சன் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்தக் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த பசு மாடுகளின் உடலங்களை பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்படையினர் புதைத்தனர்.