வாகரையில் மின்னல் தாக்கி 27 பசுக்கள் உயிரிழப்பு

வாகரையில் மின்னல் தாக்கி 27 பசுக்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2020 | 8:34 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – வாகரை, மாவடி ஓடை பகுதியில் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளன.

மாவடி ஓடை பகுதியில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.

இதன்போது, மின்னர் தாக்கத்தினால் தமது 27 பசு மாடுகள் இறந்துள்ளதாக பண்ணையாளரான தம்பி ஐயா ரஞ்சன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அந்தக் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறந்த பசு மாடுகளின் உடலங்களை பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்படையினர் புதைத்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்