பொது மன்னிப்பின் கீழ் 444 கைதிகள் விடுதலை

பொது மன்னிப்பின் கீழ் 444 கைதிகள் விடுதலை

பொது மன்னிப்பின் கீழ் 444 கைதிகள் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2020 | 7:41 am

Colombo (News 1st) சிறைக்கைதிகள் 440 இற்கும் அதிகமானோர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சிறைச்சாலைகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பெயர்ப் பட்டியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க,
வெலிக்கடை சிறைச்சாலையின் 83 கைதிகள்
கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் 06 கைதிகள்
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் 04 கைதிகள்
அநுராதபுரம் சிறைச்சாலையின் 28 கைதிகள்
பதுளை சிறைச்சாலையின் 07 கைதிகள்
மட்டக்களப்பு சிறைச்சாலையின் 12 கைதிகள்
போகம்பர சிறைச்சாலையின் 16 கைதிகள்
பூசா சிறைச்சாலையின் 06 கைதிகள்
பல்லன்சேன சிறைச்சாலையின் 07 கைதிகள்
காலி சிறைச்சாலையின் 14 கைதிகள்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் 12 கைதிகள்
குறுந்துகஸ்ஆர சிறைச்சாலையின் 6 கைதிகள்
களுத்துறை சிறைச்சாலையின் 14 கைதிகள்
கேகாலை சிறைச்சாலையின்​ 01 கைதி
குருவிட்ட சிறைச்சாலையின் 35 கைதிகள்
மஹர சிறைச்சாலையின் 30 கைதிகள்
மாத்தறை சிறைச்சாலையின் 01 கைதி
மொனராகலை சிறைச்சாலையின் 13 கைதிகள்
நீர்கொழும்பு சிறைச்சாலையின் 12 கைதிகள்
பல்லேகலை சிறைச்சாலையின் 54 கைதிகள்
பொலன்னறுவை சிறைச்சாலையின் 10 கைதிகள்
தல்தென சிறைச்சாலையின் 24 கைதிகள்
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் 20 கைதிகள்
திருகோணமலை சிறைச்சாலையின் 03 கைதிகள்
வாரியபொல சிறைச்சாலையின் 16 கைதிகள்
வவுனியா சிறைச்சாலையின் 03 கைதிகள்
வட்டருக்க சிறைச்சாலையின் 05 கைதிகள்
வீரவில சிறைச்சாலையின் 02 கைதிகள்
என மொத்தமாக 444 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

விடுதலை செய்யப்படுகின்றவர்களுள் 18 பெண் கைதிகள் உள்ளடங்குகின்றனர்.

சிறு குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிறையில் கழித்த ஒரு வருடம் அல்லது அதன் ஒரு பகுதிக்கு தலா 3 மாதம் வீதம் அரச மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நிலமையில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பாக இது அமைவதாக அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்