புதிய அரசை உருவாக்குமாறு பிரெஞ்ச் ஜனாதிபதி லெபனானிடம் கோரிக்கை

புதிய அரசை உருவாக்குமாறு பிரெஞ்ச் ஜனாதிபதி லெபனானிடம் கோரிக்கை

புதிய அரசை உருவாக்குமாறு பிரெஞ்ச் ஜனாதிபதி லெபனானிடம் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2020 | 8:28 am

புதிய அரசை உருவாக்குக: லெபனானிடம் மெக்ரோன் கோரிக்கை

Colombo (News 1st) லெபனானில் புதிய அரசாங்கத்தை உருவாக்குமாறு பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

லெபனானில் இடம்பெற்ற பாரிய வெடிச்சம்பவத்தை அடுத்து ஒரே மாதத்திற்குள் இரண்டாவது தடவையாகவும் பிரெஞ்ச் ஜனாதிபதி லெபனானுக்கு விஜயம் செய்துள்ளார்.

கடந்த மாதத்தின் முதற்பகுதியில் 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் அங்கு சென்றுள்ளார்.

லெபனான் இராஜதந்திரி முஸ்தபா அதீப் அந்நாட்டின் பிரதமராக பெயரிடப்பட்ட சில மணித்தியாலங்களில் மெக்ரோன் அங்கு சென்றிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்று 2 நாட்களில் லெபனான் சென்றிருந்த மெக்ரோன் லெபனானின் பல தசாப்தங்களாக தொடரும் அரசியல் தளம்பல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்